நான், நாங்கள், நீ, நீங்கள்
• நான் என்ற சொல், தன்னைக் குறிப்பதாகும்
(எ-டு)
நான் படம் பார்க்கிறேன்.
நான் பந்து விளையாடுகிறேன்.
நான் ஓவியம் வரைகிறேன்.
• நாங்கள் என்ற சொல், தங்களைக் குறிப்பதாகும்
(எ-டு)
நாங்கள் படம் பார்க்கிறோம்.
நாங்கள் பந்து விளையாடுகிறோம்.
நாங்கள் ஓவியம் வரைகிறோம்.
நான், நாங்கள், நீ, நீங்கள்
• நீ என்ற சொல், எதிரில் இருக்கும் ஒருவரைக் குறிப்பதாகும்
(எ-டு)
நீ படம் பார்க்கிறாய்.
நீ பந்து விளையாடுகிறாய்.
நீ ஓவியம் வரைகிறாய்.
• நீங்கள் என்ற சொல், எதிரில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்
(எ-டு)
நீங்கள் படம் பார்க்கிறீர்கள்.
நீங்கள் பந்து விளையாடுகிறீர்கள்.
நீங்கள் ஓவியம் வரைகிறீர்கள்.
இப்போது சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:-
• _____________ கடைக்குச் செல்கிறேன்.
(நான்)
• _____________ பள்ளிக்குச் செல்கிறோம்.
(நாங்கள்)
• _____________ இப்போது படம் பர்ர்க்கிறாய்.
(நீ)
• _____________ உறங்கச்செல்கிறீர்கள்.
(நீங்கள்)
கருத்தறிதல்
• கருத்தறிதல் என்பது, கருத்தை அறிதல் என்று பொருள்படும்.
• ஒவ்வொரு கருத்தறிதல் பகுதியிலும், உள்ள முக்கியமான
சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ, அடிகோடிட்டு
அல்லது சில குறிப்புகளையோ எழுதிக்கொள்வது சிறப்பாகும்.
• கருத்தறிதல் பகுதியை முதலில் மேலோட்டமாகப்
படிக்கவேண்டும். அதன்பிறகு படிக்கும்போது, சில குறிப்புகளை
எழுதிக்கொள்ளவேண்டும். இறுதியாகப் படிக்கும்போது,
கேள்விகளுக்கான விடைகளை எழுதும் வகையில்
படித்துக்கொள்ளவேண்டும்.
இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-
• இணையத்தளம் - http://www.rksystems.com.sg/
• School ID – QPS
• Username and Passwords
நீங்கள் ‘சரியான எண்ணை நிரப்பு’ எனும் தலைப்பிலுள்ள முதல் 10 பயிற்சிகளைச் செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்
Friday, July 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment