Monday, June 29, 2009

Lessons for P3 - Week 1(Monday)

Dear Pupils,

Qihua Primary School has come up with this E-Learning to ensure Continuity of Learning, though schools have closed.

• The 1st 30 minutes of a lesson comprises of teacherfs instruction and teaching
• The remaining 30 minutes will be for pupils to complete the assignments.

வணக்கம் மாணவர்களே,

நீங்கள் உங்கள் பாடங்களை அன்றாடம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

• முதல் 30 நிமிடங்களுக்கு, ஆசிரியர் தயாரித்த பாடங்களை நன்கு படித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.

• அடுத்த 30 நிமிடங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பாடங்களைச் செய்யவேண்டும்.


நான், நாங்கள், நீ, நீங்கள்
• நான் என்ற சொல், தன்னைக் குறிப்பதாகும்
(எ-டு)
நான் படம் பார்க்கிறேன்.
நான் பந்து விளையாடுகிறேன்.
நான் ஓவியம் வரைகிறேன்.
• நாங்கள் என்ற சொல், தங்களைக் குறிப்பதாகும்
(எ-டு)
நாங்கள் படம் பார்க்கிறோம்.
நாங்கள் பந்து விளையாடுகிறோம்.
நாங்கள் ஓவியம் வரைகிறோம்.


நான், நாங்கள், நீ, நீங்கள்
• நீ என்ற சொல், எதிரில் இருக்கும் ஒருவரைக் குறிப்பதாகும்
(எ-டு)
நீ படம் பார்க்கிறாய்.
நீ பந்து விளையாடுகிறாய்.
நீ ஓவியம் வரைகிறாய்.
• நீங்கள் என்ற சொல், எதிரில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்
(எ-டு)
நீங்கள் படம் பார்க்கிறீர்கள்.
நீங்கள் பந்து விளையாடுகிறீர்கள்.
நீங்கள் ஓவியம் வரைகிறீர்கள்.



இப்போது சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:-
• _____________ கடைக்குச் செல்கிறேன்.
(நான்)
• _____________ பள்ளிக்குச் செல்கிறோம்.
(நாங்கள்)
• _____________ இப்போது படம் பர்ர்க்கிறாய்.
(நீ)
• _____________ உறங்கச்செல்கிறீர்கள்.
(நீங்கள்)


இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-
• இணையத்தளம் - http://www.rksystems.com.sg/
• School ID – QPS
• Username and Passwords
http://www.sendspace.com/file/ze9p9a
நீங்கள் ‘பொருத்தமாக இணை’ எனும் தலைப்பிலுள்ள முதல் 4 பயிற்சிகளைச் செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்

No comments:

Post a Comment