Friday, July 17, 2009

Lessons for P4 - Week 1(Thursday)

நான், நாங்கள், நீ, நீங்கள்

நான் என்ற சொல், தன்னைக் குறிப்பதாகும்

(எ-டு)
நான் படம் பார்க்கிறேன்.
நான் பந்து விளையாடுகிறேன்.
நான் ஓவியம் வரைகிறேன்.


நாங்கள் என்ற சொல், தங்களைக் குறிப்பதாகும்

(எ-டு)
நாங்கள் படம் பார்க்கிறோம்.
நாங்கள் பந்து விளையாடுகிறோம்.
நாங்கள் ஓவியம் வரைகிறோம்.

நான், நாங்கள், நீ, நீங்கள்

நீ என்ற சொல், எதிரில் இருக்கும் ஒருவரைக் குறிப்பதாகும்

(எ-டு)
நீ படம் பார்க்கிறாய்.
நீ பந்து விளையாடுகிறாய்.
நீ ஓவியம் வரைகிறாய்.


நீங்கள் என்ற சொல், எதிரில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்

(எ-டு)
நீங்கள் படம் பார்க்கிறீர்கள்.
நீங்கள் பந்து விளையாடுகிறீர்கள்.
நீங்கள் ஓவியம் வரைகிறீர்கள்.

இப்போது சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:-


_____________ கடைக்குச் செல்கிறேன்.
(நான்)


_____________ பள்ளிக்குச் செல்கிறோம்.
(நாங்கள்)


_____________ இப்போது படம் பர்ர்க்கிறாய்.
(நீ)


_____________ உறங்கச்செல்கிறீர்கள்.
(நீங்கள்)


அவர், அவர்கள்

அவர் என்ற சொல், எதிரில் இருக்கும் பெரியவரைக் குறிக்கும்

(எ-டு)
அவர் படம் பார்க்கிறார்.
அவர் செய்தித்தாள் படிக்கிறார்.
அவர் என் தந்தை.


அவர்கள் என்ற சொல், எதிரில் இருப்பவர்களைக் குறிக்கும்

(எ-டு)
அவர்கள் என் நண்பர்கள்.
அவர்கள் மாணவர்கள்.
அவர்கள் காற்பந்து விளையாடுகிறார்கள்.

அவள், அது, அவை

(எ-டு)

அவள் என் தோழி.

அவள் என் தங்கை.

அது எனது பட்டம்.

அது என்னுடைய புத்தகம்.

அவை புத்தகங்கள்.

அவை மீன்கள்.

இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-


இணையத்தளம் - www.rksystems.com.sg


School ID – QPS


Username and Passwords



நீங்கள் ‘கோடிட்ட இடத்தை நிரப்பு’ (இறுதி 5 பயிற்சிகள்) மற்றும் ‘கருத்தறிதல்’ (முதல் 5 பயிற்சிகள்) செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்

No comments:

Post a Comment