Friday, July 17, 2009

Lessons for P3 - Week 1(Friday)

ஏன், எங்கே, எப்போது, எது, எவை

மேலே குறிப்பிட்ட சொற்கள் அனைத்துமே கேள்விகள் கேட்பதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள்.

(எ-டு)

நீ ஏன் பள்ளிக்குத் தாமதமாக வந்தாய்?

நீ எங்கே சென்றாய்?

அவன் எப்போது பள்ளிக்கு வருவான்?

இதில் எது அவனுடைய புத்தகம்?

எவை பணிவன்பான செயல்கள்?

கருத்தறிதல்


கருத்தறிதல் என்பது, கருத்தை அறிதல் என்று பொருள்படும்.


ஒவ்வொரு கருத்தறிதல் பகுதியிலும், உள்ள முக்கியமான
சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ, அடிகோடிட்டு
அல்லது சில குறிப்புகளையோ எழுதிக்கொள்வது சிறப்பாகும்.


கருத்தறிதல் பகுதியை முதலில் மேலோட்டமாகப்
படிக்கவேண்டும். அதன்பிறகு படிக்கும்போது, சில குறிப்புகளை
எழுதிக்கொள்ளவேண்டும். இறுதியாகப் படிக்கும்போது,
கேள்விகளுக்கான விடைகளை எழுதும் வகையில்
படித்துக்கொள்ளவேண்டும்.

இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-


இணையத்தளம் - www.rksystems.com.sg


School ID – QPS


Username and Passwords



நீங்கள் ‘கோடிட்ட இடத்தை நிரப்பு’ (இறுதி 5 பயிற்சிகள்) மற்றும் ‘கருத்தறிதல்’ (5 பயிற்சிகள்) செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்

No comments:

Post a Comment